தந்தை கண்முன்னே மகன் துள்ளத்துடிக்க வெட்டிக்கொலை... நெற்குன்றத்தில் பயங்கரம்.! 7 பேர் கும்பல் வெறிச்செயல்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள நெற்குன்றம் சக்தி நகர் பகுதியை சார்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரம்மதேவன். இவரது மகன் நாராயணன் (வயது 23). நாராயணனன் பாலிடெக்னீக்கில் படித்து வந்த நிலையில், படிப்பை பாதியிலேயே விட்டுள்ளார். 

இதனைத்தொடர்ந்து, திண்டிவனம் பகுதியில் உள்ள உறவினரின் இல்லத்தில் தங்கியிருந்து வருகின்றார். இந்நிலையில், தனது தம்பியின் பிறந்த நாளினை கொண்டாட சென்னைக்கு நாராயணன் வந்திருந்துள்ளார். 

நேற்று இரவு வீட்டருகே உள்ள கடையில் சாப்பிட்டுவிட்டு சாலையோரமாக நடந்து சென்ற நிலையில், ஆட்டோவில் வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் பிரம்மதேவன் கண் முன்னே அவரது மகன் நாராயணனை வெட்டிக்கொலை செய்து தப்பி சென்றுள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோயம்பேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், முதற்கட்ட விசாரணையில் நாராயணனிற்கும் - ரவுடி தன ஜெயன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததும், இதனால் இக்கொலை அரங்கேறியுள்ளதும் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Nerkundram Youngster Murder IN front of his Father due to Revenge Police Investigation 8 April 2021


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->