பாடத்திட்டத்திற்கு முன் செய்தித்தாள்...! உத்தரப்பிரதேச பள்ளிகளில் புதிய 10 நிமிட விதி...! - Seithipunal
Seithipunal


மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்தும் நோக்கில், உத்தரப்பிரதேச அரசு ஒரு புதுமையான கல்வி முயற்சியை தொடங்கியுள்ளது. மாநிலத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகள் முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரை உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, பள்ளிகளில் காலை வகுப்புகள் தொடங்குவதற்கு முன் 10 நிமிடங்கள் செய்தித்தாள் வாசிப்புக்காக ஒதுக்கப்பட வேண்டும். அந்த நேரத்தில் மாணவர்கள் தேசிய, சர்வதேச மற்றும் விளையாட்டு செய்திகளில் இருந்து முக்கிய தகவல்களை ஒருவருக்கொருவர் வாசித்து பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இதற்காக பள்ளிகளில் இந்தி மற்றும் ஆங்கில செய்தித்தாள்களை தினசரி வாங்கி வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்களின் சொல்வளத்தை விரிவாக்கும் வகையில், செய்தித்தாள்களில் இருந்து ஐந்து கடினமான சொற்களைத் தேர்ந்தெடுத்து ‘இன்றைய சொல்’ என்ற தலைப்பில் அறிவிப்பு பலகையில் பதிவிட வேண்டும்.

செய்தித்தாள் தலையங்கங்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களிடையே குழு விவாதங்கள் நடத்தவும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் பொது அறிவு, சொல்வளம், விமர்சன சிந்தனை, கவனத் திறன் மற்றும் சமூக விழிப்புணர்வு ஆகியவற்றை ஒருங்கிணைந்த முறையில் வளர்க்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Newspaper before curriculum new 10 minute rule Uttar Pradesh schools


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->