இசை மேதையை இழிவு செய்கிறதா சென்னை மாநகராட்சி?! - Seithipunal
Seithipunal


படுமோசமாக சேதமடைந்துள்ள அதே சாலையை சீரமைக்காமல், வெறுமனே சாலையின் பெயரை மட்டும் மாற்றி இசை மேதையை சென்னை மாநகராட்சி இழிவு செய்துள்ளதாக பசுமைத் தாயகம் அமைப்பின் மாநிலத் செயலாளர் இர. அருள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "வடபழனி பேருந்து நிலையம் அருகில் குமரன் காலனி முதன்மைச் சாலைக்கு, இசை மேதை மாண்டலின் ஸ்ரீநிவாஸ் பெயரை சூட்டி – மேயர் பிரியா, எம்.எல்.ஏ ஜெ. கருணாநிதி, மாநகராட்சி ஆணையர் டாக்டர் இராதாகிருஷ்ணன், துணை மேயர் மு. மகேஷ்குமார் என எல்லோரும் இன்று (19.092023) நேரில் சென்று புதிய பெயர் பலகை திறந்துள்ளனர்.

ஆனால், மேயர் நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு அருகிலேயே, சில மீட்டர் தொலைவில் படுமோசமாக சேதமடைந்துள்ள அதே சாலையை சீரமைக்காமல், வெறுமனே சாலையின் பெயரை மட்டும் மாற்றியுள்ளனர்!

பெயர் பலகை திறந்து வைத்த மேயரும் அதிகாரிகளும், சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு குறைவான தொலைவே உள்ள இந்த சிறிய சாலையில் பயணம் செய்து பார்த்திருக்க வேண்டாமா?

இலேசான மழைக்கே இருசக்கர வாகனங்களின் சக்கரங்கள் மூழ்கும் அளவுக்கு மழை நீரும் சாக்கடையும் தேங்கும் சாலை இதுவாகும். ஒவ்வொரு மழைக்கும் பல வாகன ஓட்டிகள் குழிகளில் சிக்கி கீழே வீழ்வது இங்கு வழக்கமாக உள்ளது.

மாண்டலின் இசை மேதையான ஸ்ரீநிவாஸ் பெயரை சூட்டும் போது, அந்த சாலையை சீரமைக்காமலேயே திறப்பது, அவருக்கு செய்யும் இழுக்கு ஆகாதா?  இதுதான் திராவிட மாடலா?

மேயர், எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையர், துணை மேயர் என எல்லோரும் நேரில் வருகை தந்து, சாலைக்கு புதிதாக ‘நாமகரணம்’ சூட்டும் போதுகூட, இந்த சாலையை சீரமைக்காவிட்டால், இவர்கள் வேறு எப்போது சாலையை சரி செய்யப்போகிறார்கள்?" என்று இரா அருள் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Mondolin shrinivas Main Road issue


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->