#Breaking: எம்.ஜி.ஆர். பல்கலை. முன்னாள் துணை வேந்தர் விமான டிக்கெட் சீட்டிங் விவகாரம்.! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..! - Seithipunal
Seithipunal


எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக முன்னாள் மருத்துவ துணை வேந்தருக்கு 2 வருட சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் துணை வேந்தராக பணியாற்றி வந்தவர் மீர் முஸ்தபா உசேன். 

இவர் கடந்த 2008 ஆம் வருடம் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் நடைபெற்ற மருத்துவ ஆய்வு தொடர்பான விசயத்திற்கு விமானத்தில் பயணம் செய்துள்ளார். இதன்போது விமானத்தில் உயர்வகுப்பில் பயணம் செய்ததாக கூறி ரூ.2 இலட்சத்தை பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றுள்ளார். 

ஆனால், இவர் உயர்வகுப்பில் பயணம் செய்யாமல் சாதாரண வகுப்பிலேயே பயணம் செய்துள்ளார். இதனைப்போன்று நார்வே, ஜெர்மனி, இங்கிலாந்து என பல நாடுகளுக்கும் பல்கலைக்கழகத்தின் பேரில் பயணம் செய்து பயணக்கட்டண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இதன் மூலமாக மொத்தமாக ரூ.10  இலட்சம் வரை மோசடி செய்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக புகார் எழுந்தது. இந்த வழக்கு குறித்த விசாரணை சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பு வாசித்த நிலையில், முன்னாள் துணைவேந்தர் முஸ்தபா உசேனின் மோசடி உறுதி செய்யப்பட்டு, இரண்டு வருட சிறை தண்டனை விதிப்பதாக சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai MGR University Ex Vice Chancellor Mustafa Went Jail Flight Ticket Cheat Issue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->