#சென்னை | மெட்ரோ ரயில் மேம்பால கட்டுமான பில்லர் சரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை, வடபழனி ஆற்காடு ரோடு விஜயா மருத்துவமனை வாசலில் மெட்ரோ ரயில் கட்டுமான பில்லர் சரிந்ததாள் போக்குவரத்துபாதிக்கப்பட்டுள்ளது. 

வடபழனி 100 அடி சாலையில் மெட்ரோ பணிகள் நடந்து வரும் நிலையில், இன்று மாலை சுமார் 7 மணியளவில் விஜயா மருத்துவமனை அருகில் ஒரு கட்டுமான பில்லரின் கம்பிகள் சாய்ந்தது.

இதனையடுத்து மெட்ரோ ரயில் பணி ஊழியர்கள் அதை நிமிர்த்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிறேன் மூலம் இந்த பனி நடப்பதால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

முன்னதாக கடந்த ஜனவரி மாதம் கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரின், நாகவரா பகுதியில் 'கல்யாண் நகரில் இருந்து எச்.ஆர்.பி.ஆர்.' பகுதி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலத்துக்காக அமைக்கப்பட்ட கட்டுமான தூண் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தாய் மற்றும் அவரது 2 வயது மகன் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai metro train vada palani Traffic jam


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->