சரக்கடிக்க பணம் தராத தாயை கொடூர கொலை செய்த மகன்.. மதுவால் மதியிழந்து அரங்கேறிய கொடூரம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள மதுரவாயல் நெற்குன்றம் அருகேயுள்ள பெருமாள் கோவில் பகுதியை சார்ந்தவர் ஆதியம்மாள் (வயது 65). இவருக்கு மகேஷ் குமார் என்ற 38 வயது மகனும், சதீஷ் என்ற 35 வயது மகனும் உள்ளனர். வீட்டின் மாடியில் இருக்கும் குடிசை இல்லத்தில் ஆதியம்மாள் தனியாக வசித்து வந்துள்ளார். கீழேயிருக்கும் வீட்டில் மகேஷ் குமார் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில், இன்று நீண்ட நேரம் ஆகியும் ஆதியம்மாள் வீட்டில் இருந்து வெளியே வராததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்க்கையில், தலையில் பலத்த காயத்துடன் இரத்த வெள்ளத்தில் ஆதியம்மாள் பிணமாக இருப்பதை கண்டுள்ளனர். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த விரைந்த அதிகாரிகள் ஆதியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த நிலையில், எந்த விஷயத்தையும் அறியாதது போல மதுபோதையில் உறங்கிய மகேஷ் குமாரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில், " மதுரை நீதிமன்றத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த மகேஷ் குமார், அங்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருந்த நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதன்போது மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி, தினமும் மது அருந்தி தாயுடன் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று மது அருந்த தாயிடம் பணம் கேட்டு, இதில் ஏற்பட்ட தகராறில் பணம் தராத தாயை இரும்பு குழாய் எடுத்து அடித்து கொலை செய்துள்ளது " தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக கோயம்பேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மகேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Maduravoyal Nerkundram Mother Killed by Drunken Son


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->