சென்னை லாரி டிரைவர் மீது மிளகாய்ப்பொடி தாக்குதல் – ரூ.10 லட்சம் கொள்ளை!
Chennai lorry driver attacked with chili powder Rs 10 lakh stolen
சென்னையில் இருந்து நாமக்கல்லுக்கு ரூ.10 லட்சம் தொகையுடன் சென்ற லாரி டிரைவரின் மீது மர்மநபர்கள் மிளகாய்ப்பொடி வீசி, பணத்தை தட்டிக் கொண்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த சப்தகிரி என்பவர் சென்னையை சேர்ந்த முட்டை வியாபாரி செல்வராஜ் என்பவருடைய நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.சம்பவத்தன்று சப்தகிரி ரூ.10 லட்சம் பணத்துடன் சென்னையில் இருந்து நாமக்கல்லுக்கு லாரியில் புறப்பட்டார்.
அப்போது விழுப்புரம் மாவட்டம் பாப்பனப்பட்டு அருகே, சிறுநீர் கழிக்க லாரியை நிறுத்திய தருணத்தில், வெள்ளை காரில் வந்த 2 மர்மநபர்கள், டிரைவர் சப்தகிரியின் முகத்தில் மிளகாய்ப்பொடி வீசி தாக்கினர்.
இதையடுத்து, லாரியில் இருந்து டிரைவர் இருக்கையின் அடியில் இருந்த ₹10 லட்சத்தை எடுத்து காரில் தப்பியோடினர்.தாங்கள் வந்த காரில் ஏறி திருச்சி மார்க்கமாக தப்பிச்சென்று விட்டனர்.

கண் இமைக்கும் நேரத்தில் பணத்தை பறிகொடுத்த சப்தகிரி இதுபற்றி விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில், டிரைவர் சப்தகிரியிடம் சந்தேகங்கள் எழுந்துள்ளதால், அவரது தொடர்பும் விசாரணையின் கீழ் உள்ளது. காரில் தப்பிச் சென்ற மர்மநபர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
English Summary
Chennai lorry driver attacked with chili powder Rs 10 lakh stolen