சாலையை திடீரென கடந்த நபர்... உயிரை காப்பாற்ற நினைத்து, எதிரே வந்த பேருந்துக்கு உம்மா கொடுத்த சோகம்.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நேற்றிரவு அரசு பேருந்து வந்துகொண்டு இருந்துள்ளது. இந்த பேருந்தை 50 வயதாகும் ஓட்டுநர் அசோக் இயக்கியுள்ளார். 

இந்த பேருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த சமயத்தில், சாலையோரம் நின்ற நபர் திடீரென சாலையை கடக்க முயற்சித்துள்ளார். இதனைக்கண்டு சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் அசோக், அவரின் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பியுள்ளார். 

இதனால் கட்டுப்பாட்டினை இழந்த பேருந்து, சாலையின் மறுபக்கத்திற்கு பாய்ந்து எதிர்திசையில் வந்த வேலூர் நோக்கி செல்லும் பேருந்தின் மீது மோதியது. இந்த விபத்தில் இரண்டு பேருந்தின் முன்பக்க கண்ணாடிகள் நொறுங்கி, முன்புறம் சேதம் அடைந்தது. 

இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த பெண்மணி மற்றும் சாலையை கடக்க முயற்சித்த மற்றொரு நபர் என இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த விஷயம் தொடர்பாக கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Koyembedu Bus Stand 2 Bus Accident 2 Injured


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->