சபரிமலை பக்தர்களுக்கு குட் நியூஸ்... சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் இயக்கம்!
Chennai Kollam special train operation
சென்னை-கொல்லம் இடையே நாளை முதல் சபரிமலை சீசனை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
சபரிமலையில் மகர விளக்கு பூஜை நடைபெறுவதை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலை குறைப்பதற்காகவும் சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் வரை நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

இந்த ரயில் கொல்லத்திலிருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். அதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 5 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
இந்த ரயிலில் 8 குளிர்சாதன பெட்டிகளும், 5 படுகை வசதி கொண்ட பெட்டிகளும், 2 பொதுப்பணிகளும் உள்ளது. இந்த ரயில் திருச்சூர், பாலக்காடு, எர்ணாகுளம் டவுன், திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Chennai Kollam special train operation