ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க முடியுமா? - உயர்நீதிமன்றம் கேள்வி?. - Seithipunal
Seithipunal


சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்திலிருந்தே வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் அங்கிருந்தே கிளம்ப வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதில், 'பயணிகள் மட்டுமின்றி, ஆம்னி பேருந்து நிறுவனங்களும் அசவுகரியத்திற்கு ஆளாகியுள்ளனர். 

இதனால் வழக்கு முடியும் வரை தொடர்ந்து கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும்' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளை சில வாரங்களுக்கு சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்க அனுமதிக்க முடியுமா? என்பது குறித்து, தமிழக போக்குவரத்து துறை ஆணையர், நாளை விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai high court question raised amni bus run in koyambedu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->