சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!
chennai heavy rain now
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது. நகரின் பல பகுதிகளில் மிதமான முதல் கனமழை வரை பதிவாகியுள்ளது.
கோயம்பேடு, அண்ணாநகர், முகப்பேர், வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து மழை பெய்ததால் சாலைகளில் நீர் தேங்கல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல், புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், வாகனகரம், மதுரவாயல், திருவேற்காடு, பூவிருந்தவல்லி உள்ளிட்ட இடங்களிலும் இடைவிடாது சாரல் மழை கொட்டுகிறது.
மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை வலுத்துள்ளது. தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், மேடவாக்கம், செம்பாக்கம், சிங்கப்பெருமாள் கோயில், மறைமலைநகர், திருக்கழுங்குன்றம், மாமல்லபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த சில நாட்களும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதிக ஈரப்பதம் காரணமாக வானிலை சூழல் மாறி, வலுவான மேகக் கூட்டங்கள் உருவாகி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மழை காரணமாக சில இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.