கஞ்சா விற்பனை செய்த தலைமைச் செயலக பெண் ஊழியர் கைது.! - Seithipunal
Seithipunal


சென்னையில், கஞ்சா விற்பனை செய்ததாக தலைமை செயலக பெண் ஊழியரும், அவரது கணவரும் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், போலீசார் அவர்களது கூட்டாளிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சென்னையில் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் அருள். கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்து வரும் இவரின் மனைவி கோட்டீஸ்வரி. இவர் தலைமை செயலகத்தில், பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் போலீசார் கஞ்சாவை ஒழிக்கத் தீவிர விசாரணை நடத்தி வந்ததையடுத்து, கஞ்சா விற்பனை தொடர்பாக சமீபத்தில் அருள் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அதன் விவரம் பின்வருமாறு:-

"தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த பிரபு, 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து, புரசைவாக்கம் தானா தெருவில் காத்திருந்தார். அதை அவரிடம், 1.20 லட்சம் ரூபாய்க்கு வாங்கினேன். இதை நானும், என் மனைவி கோட்டீஸ்வரி, சகோதரர்கள் பழனி, கணபதி ஆகியோர் பொட்டலமாக தயாரித்து, 3 லட்சம் ரூபாய்க்கு விற்று விடுவோம்.

கஞ்சாவை மொத்தமாக விற்க மாட்டோம். முதலில், 2 கிலோவை பொட்டலம் போட்டு விற்று விடுவோம். அதற்காக, இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துவோம். என்னிடம் கஞ்சா வாங்கி விற்க, சென்னையின் பல இடங்களில் கூட்டாளிகள் உள்ளனர்" என்றுத் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அருள் மனைவி கோட்டீஸ்வரியையும் கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தினர். ஆனால், அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். மேலும், அருளின் கூட்டாளிகளை, போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai head office oman employee arrest for drugs sales


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->