தூத்துக்குடி: உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு! ஜீரணிக்கவே முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தமான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியான கேள்வியை எழுப்பி வருகிறது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, துப்பாக்கி சூடு நடப்பதற்கு முன்பு அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளின் சொத்து மதிப்பு என்ன? துப்பாக்கி சூடு நடந்ததற்கு பிறகான நாலு மாதங்களில் அந்த காவல்துறை அதிகாரிகளின் சொத்து மதிப்பு என்ன என்பது குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. 

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கூடுதல் அவகாசம் கேட்டனர். 

இதற்கு அவகாசம் தருவதாக தெரிவித்த நீதிபதிகள், அவர்களின் சொத்து விவரங்களை முழுவதுமாக எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். 

மேலும் இந்த வழக்கில் நீதிபதிகள் சில கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு, 

இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வரை நடந்துள்ளது. ஆனால் அவர்களின் விசாரணை திருப்திகரமாக இல்லை. எனவே தான் லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணை சரியாக இருக்கும் என்று நம்புகிறோம். 

சம்பவம் நடந்த அன்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் போலீசாரை கண்டு அஞ்சி நடுங்கி ஓடி உள்ளனர். அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது போன்ற ஒரு சம்பவத்தை எங்களது வாழ்நாளில் நாங்கள் கேள்விப்பட்டது கூட இல்லை. 

எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்பதற்காகவே இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்த விசாரணைக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை மூன்று மாதத்திற்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர். 

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கி இந்த வழக்கை முடித்து விட முடியாது என்றும், ஒரு தனிப்பட்ட தொழிலதிபரின் அழுத்தத்தின் பேரில், காவல்துறையினர் தாங்கள் செய்த தவறை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai HC Say About Thoothukudi Gun Fire Sterlite


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->