மூடநம்பிக்கை, ஜோதிடத்திற்கு அடிமை - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரபரப்பு கருத்து! - Seithipunal
Seithipunal


ஜோதிடத்திற்கு யாரும் அடிமையாகக்கூடாது என்றும், மூடநம்பிக்கையை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டீக்காராமன் அறிவுரை வழங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் நடைபெற்ற ஜோதிடம் தொடர்பான புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டீக்காராமன் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சிகள் பேசிய நீதிபதி டீக்காராமன், "எனக்கு கிட்டத்தட்ட 38 ஆண்டுகளாக ஜோதிடம் ஒரு பொழுதுபோக்காக உள்ளது. தற்போது நீதிபதியில் இருப்பதால் என்னால் ஜோதிடத்தை பின்பற்ற முடியவில்லை. 

எனக்கு தெரிந்தவரை பல்வேறு விதமான பஞ்சாங்கங்களின் அடிப்படையில் இந்த ஜோதிடம் அமைகிறது. இதில் கோவிலுக்கு என்றும், தனி மனிதனுக்கு என்றும் தனித்தனி பஞ்சாங்கம் என்று இருந்த குழப்பத்தை காஞ்சி பெரியவர் தீர்த்து வைத்தார்.

ஆனால் ஏராளமான ஜோதிடங்கள் உருவாகி உள்ளன. அதில் ஒன்று பிரபஞ்ச ஜோதிடம். இந்த ஜோதிடத்தின் அடிப்படையில் தான் சென்னை மாநகர் பிரிக்கப்பட்டது. 

சென்னையில் விருச்சக ராசி எங்கு உள்ளது? கும்பராசி எங்கு உள்ளது? விமானம் ஏன் அங்கு நிறுத்தப்படுகிறது? ரயில் பெட்டி தொழிற்சாலை ஏன் இங்கு உள்ளது? என்றெல்லாம் ஆராயப்பட்டுள்ளன. 

திருநெல்வேலியில் வசந்தன் என்ற ஜோதிடர் இலங்கை ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "இந்த சம்பவம் இந்த காலகட்டத்தில் தான் நடக்கும் என்று, ஜோதிடம் கூறியதை அப்படியே நம்பிக் கொண்டு சும்மா உட்கார்ந்து இருந்தால், அவர்கள் எல்லாம் ஜோதிடத்துக்கு அடிமையானவர்கள்" என்று ஜோதிடர் வசந்தன் கூறினார்.

அது போல தான் ஜோதிடத்தில் உள்ள மூடநம்பிக்கையை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். எந்த ஒரு விஷயத்தையும் நாம் அறிவில் பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம். அதற்கு மேல் உள்ளதை மூடநம்பிக்கை என்று ஒதுக்கிவிட வேண்டும்.

எனவே, ஜோதிடத்தை ஒரு பக்கம் நம்பினாலும், வெற்றி பெற நாமும் முயற்சி செய்ய வேண்டும். ஜோதிடத்திற்கு யாரும் அடிமையாகக் கூடாது. அது ஒரு வழிகாட்டி, அது ஒரு டார்ச் லைட் போன்றது அவ்வளவு தான். இது அனைத்துமே என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே" என்று நீதிபதி  டீக்காராமன் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai HC Judge Say About Astrology


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->