டீ குடிக்க சென்ற மீன் வியாபாரி எண்ணெய் பாத்திரத்தில் விழுந்து உயிரிழப்பு.!
chennai fisher man died in tea shop
சென்னை அடுத்த தாம்பரம் அருகே முடிச்சூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது40). இவர் அந்த பகுதியில் மீன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் வழக்கமாக டீ குடிக்கும் கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது டீ குடித்துவிட்டு கடையில் இருந்து வெளியே வந்த போது எதிர்பாராத விதமாக கால் வழிக்கி அருகில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெய் பாத்திரத்தில் விழுந்துள்ளார்.

இதனைக்கண்ட அருகில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்த அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மனிதனின் உயிர் எப்படி வேண்டுமானாலும் பறிக்கப்படும் என்பது போல் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
chennai fisher man died in tea shop