சென்னையில் "1500" அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்... தேர்தல் அதிகாரி அதிரடி.!! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


சென்னையில் தேர்தல் பணிக்கு வராத 1500 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தேர்தல் பணி தொடர்பாக பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நாளை மீண்டும் பயிற்சி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள மூன்று நாடாளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 19,400 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 4 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் நடத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். 

இவர்கள் அனைவரும் வாக்குப்பதிவு அன்று எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற பயிற்சி இந்திய தேர்தல் ஆணையம் மூலம் வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்கப்படும் பயிற்சிக்கு சென்னையில் மட்டும் 1500 பேர் வரவில்லை என தேர்தல் நடத்தும் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பட்டியல் தயாரிப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னையில் தேர்தல் நடத்தும் பயிற்சிக்காக வராத 1500 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் பெரும்பாலானோர் மருத்துவ காரணங்களை கூறி பயிற்சிக்கு வரவில்லை என விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து நாளை வழங்க உள்ள பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்கள் அனைவரும் இச் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தவறும் பட்சத்தில் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai election officer sent notice to 1500 govt staffs


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->