சென்னை: நொடியில் உயிர் தப்பிய இளைஞர் - திடீரென பற்றி எரிந்த கார்! - Seithipunal
Seithipunal


சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சேர்ந்த யோகராஜ் என்பவர் காரில் சென்று கொண்டிருந்தபோது அவரது காரில் இருந்து திடீரென்று புகை வந்த நிலையில் அவர் இறங்கியதும் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை தாண்டவராயன் தெருவில் வசித்து வருபவர் காசி. இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர் தனது குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று வருவதற்காக திருவொற்றியூரில் உள்ள சுங்கச் சாலை அருகிலுள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தனது காரை நிறுத்தி இருந்தார். 

இதனைத் தொடர்ந்து, லாரி ஓட்டுனரான காசியின் மகன் யோகராஜ் என்பவர் திருவொற்றியூரில் இருந்து அந்த காரை அங்கிருந்து ஓட்டி வந்தார். அப்போது, தண்டையார்பேட்டையில் உள்ள கும்பாளம்மன் கோவில் அருகே கார் வந்து கொண்டிருக்கும் போது சற்றென்று அந்த காரில் இருந்து புகை வந்துள்ளது. 

திடீரென்று காரில் இருந்து புகை வந்ததும் பயந்த யோகராஜ் உடனடியாக காரை நிறுத்திவிட்டு தூரமாக ஓடி வந்தார். இதனை எடுத்து சற்று நேரத்தில் அந்தக் கார் தீப்பிடித்து பயங்கரமாக எரிய ஆரம்பித்தது. புகை வந்தது அறிந்து காரை விட்டு இறங்கி வந்ததால் யோகராஜ் உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் நடந்த இடத்தில்  விநாயகபுரத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் காரும் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது காரம் தீ பற்றி எரிய தொடங்கியது.  பதற்றம் அடைந்தவர்கள் உடனடியாக தண்டையார்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் இரண்டு கார்களும் முழுமையாக சேதமடைந்து விட்டது. இந்த சம்பவம் குறித்து காசிமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Car Fire Accident june 2024


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->