ஒமைக்ரான் பரவல் காரணமாக, தமிழகத்தின் புதிய கட்டுப்பாடு அறிவிப்பு.. இன்று முதல் அமல்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உருமாறிய ஒமைக்ரான் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்தியாவில் இதுவரை 13 மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று  செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை இதுவரை 121 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 91 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 27 பேர் மட்டும் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், தமிழக அரசு நேற்று முன்தினம் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்து. அதன் தொடர்ச்சியாக சென்னை கடற்கரையில் இன்று முதல் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சியில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஒமைக்ரான் பரவல் காரணமாக இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை கடற்கரையின் மணல் பகுதியில் மக்களுக்கு அனுமதி இல்லை. பிரத்யேக நடைபாதையில் மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் அனுமதி, நடைபயிற்சி செல்வோருக்கு மட்டும் அனுமதி என தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai beach banned


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->