பச்சை மாத்திரை, கஞ்சா., சென்னை விமான நிலையத்தை அதிரவைத்த பெண்களுக்கான பரிசு.! - Seithipunal
Seithipunal


சென்னை விமான நிலையத்தில், 52 எம்டிஎம்ஏ மாத்திரைகள், 5 கிராம் மெத் கிரிஸ்டல் மற்றும் 128 கிராம் கஞ்சா கொண்ட மூன்று பார்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.

நெதர்லாந்து நாட்டிலிருந்து வந்த இரண்டு பார்சல்கள் மதுரையில் வசிக்கும் இரு நபர்களின் பெயர்களுக்கு அனுப்பப்பட்டு இருந்தது. அதில், ஒரு பார்சலில் எம்டிஎம்ஏ என சந்தேகிக்கப்படும் மொத்தம் 28 கிராம் எடை கொண்ட 52 பச்சை நிற மாத்திரைகள் இருந்தன.

இந்த மாத்திரைகளின் மதிப்பு சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் என்று சொல்லப்படுகிறது. இரண்டாவது பார்சலில், 50 ஆயிரம் மதிப்புடைய 5 கிராம் மெத் கிரிஸ்டல் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அமெரிக்காவில் இருந்து வந்த ஒரு பார்சல், சென்னையில் சேர்ந்த நபருக்கு அனுப்பப்பட்டு இருந்தது. அந்த பார்சலில் பெண்களுக்கு தேவையான அத்தியாவசிய பரிசுப்பொருள் என்று எழுதப்பட்டிருந்தது.

இந்த பார்சலை சோதனையிட்ட அதிகாரிகள், இதில் இருந்து 120 கிராம் கஞ்சா கஞ்சாவை கண்டுபிடித்தனர். கைப்பற்றப்பட்டுள்ள இந்த 3 பார்சல்கள் மொத்த மதிப்பு 3 லட்சத்து 12 ஆயிரம் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்துள்ள சுங்கத்துறை ஆணையர், இதுகுறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai air port ganja issue


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal