சென்னையில் தற்காலிகமாக 6 பேருந்து நிலையங்கலிருந்து எங்கு எங்கு செல்லலாம்.! முழு விவரம் உள்ளே.! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் சென்னையிலிருந்து இரண்டரை லட்சம் பேர் வெளியூர்களுக்கு சென்றுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

கோயம்பேடு, தாம்பரம் சானிடோரியம், தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி, கேகே நகர் ஆகிய ஆறு இடங்களில் இருந்து 14 ம்தேதி வரை வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 225 பேருந்துகளுடன்  4 ஆயிரத்து 950  சிறப்பு பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன. 

பொங்கல் விடுமுறைக்காக 16 ஆயிரத்து 75 பேருந்துகள் இயக்கப்படும் போக்குவரத்து துறை அறிவித்து இருந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நேற்று(11ம் தேதி சனிக்கிழமை) இரவு 10 மணி நிலவரப்படி 5,378 பேருந்துகள் மூலம் 2 லட்சத்து 81 ஆயிரத்து 795 பயணிகள் வெளியூர்களுக்கு பயணித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு முன்பதிவு செய்த பயணிகள் மூலமாக அரசுக்கு  9.12 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் ஆறு இடங்களில் இருந்து 14 ம்தேதி வரை வெளியூர்களுக்கு இயக்கப்படம் சிறப்பு பேருந்துகளின் விவரம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai 6 temporary busstand details


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->