சென்னையில் 10 விமானங்கள் திடீர் ரத்து: காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


துபாயில் பாலைவனம் நிறைந்த பகுதிகள் அதிக அளவில் உள்ளதால் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். இந்நிலையில் ஐக்கிய அரபு, அமீரகம் முழுவதும் நேற்று பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதனால் சாலைகளில் நீர் தேங்கி வாகனப் போக்குவரத்து முடங்கியுள்ளது. கனமழை மற்றும் வெள்ளம் எதிரொலியாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளம் புகுந்தால் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதேபோல் துபாயில் உள்ள வணிக வளாகங்கள் பிற முக்கிய கட்டிடங்கள் வெள்ள பாதிப்பு காரணமாக மூடப்பட்டுள்ளது. 

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐக்கிய அரபு நாடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக துபாய், சார்ஜா, குவைத் நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் மறு மார்க்கத்தில் இருந்து வரும் 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அவதி அடைந்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai 10 flights cancellation 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->