செங்கல்பட்டு : சாலையில் சுற்றும் கால்நடைகளை பொது ஏலம் விட ஆட்சியர் உத்தரவு.!   - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தின் ஆட்சியர் ராகுல்நாத் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:- "செங்கல்பட்டு மாவட்டத்தில் சாலைகளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் செல்லும் கால்நடைகளை பிடித்து மாவட்ட அளவில்  அமைக்கப்பட்டுள்ள பட்டியில் அடைக்கப்படும்.

அத்துடன் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படு்ம். இந்த நடைமுறை கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

பிடிக்கப்பட்ட கால்நடைகளை 24 மணி நேரத்திற்குள் ரூ.2 ஆயிரம் அபராதத் தொகை செலுத்தியும், கால்நடை வளர்ப்பவர்களின் வீட்டின் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் தலைமை காவலரின் பரிந்துரை கையொப்பத்தை பெற்று பிரமாண பத்திரம் சமர்ப்பித்த பிறகு கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் ஓட்டி செல்லலாம். 

அது தவறும் போது, உள்ளாட்சி அமைப்புகள் அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் மூலம் பொது ஏலம் விடப்படும். இதுமட்டுமல்லாமல், செங்கல்பட்டு மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சி அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் காவல்துறையுடன் சேர்ந்து சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் பிடிக்கப்படும். 

ஆகவே, கால்நடை உரிமையாளர்கள் தங்களுடைய கால்நடைகளை அவர்களின் சொந்த இடங்களிலேயே கட்டி வைத்து பராமரிக்கவும், பொது இடத்தில் திரிய விடாமல் முறையாக பராமரித்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. 

மேலும், கால்நடைகளை பொது இடத்தில் விடும்போது அபராதம் விதிக்கப்பட்டு, காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டு மாடுகளின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chengalpattu district collecter order to public auction cow roaming road


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->