திருச்சி வழியாக செல்லும் ரெயில் சேவை மாற்றம்! - Seithipunal
Seithipunal


திருச்சி வழியாக செல்லும் ரெயில் சேவை பராமரிப்பு பணி காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது:-

திருச்சி ரெயில்வே கோட்டத்தில் ரெயில்வே வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டு வருவதால்  அந்த வழியாக செல்லும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 22-ந்தேதி மற்றும் 24-ந்தேதி திருச்சியில் இருந்து மாலை 6 மணிக்கு விழுப்புரம் வரை செல்லும் திருச்சி - விழுப்புரம் மெமு ரெயில் விருத்தாசலம் வரை மட்டுமே இயக்கப்படும். 

இதனை தொடர்ந்து, வருகிற 23-ந்தேதி மற்றும் 25-ந்தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து காலை 5.10 மணி அளவில் திருச்சி வரை இயங்கும் விழுப்புரம் - திருச்சி மெமு ரெயில் விருதாச்சலத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு செல்லும். விழுப்புரம் - விருத்தாசலம் இடையே இந்த ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. 

பின்னர், வருகிற 26-ந்தேதி திருச்சி வழியாக கன்னியாகுமரியில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் பெனாரஸ் வரை செல்லும் கன்னியாகுமரி - பெனாரஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் கடலூர், விருத்தாசலம், விழுப்புரம் வழியாக மாற்றுப்பாதையில் இயங்கும்.

திருச்சி வழியாக திருச்செந்தூரில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு சென்னை எக்மோர் வரை செல்லும் திருச்செந்தூர் - சென்னை எக்மோர் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 22, 24, 26-ந்தேதிகளில் 2.10 மணி நேரம் தாமதமாக இரவு 10.35 மணிக்கு புறப்படும்.

வருகிற 22, 23-ந்தேதிகளில் நாகர்கோவில் - தாம்பரம் வாரந்திர சிறப்பு ரெயில் நாகர்கோவிலில் இருந்து 1.15 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும். மேலும் சென்னை எக்மோர் - மதுரை தேஜஸ் ரெயில் சென்னையில் இருந்து வருகிற 25-ந்தேதி 1.40 மணிநேரம் தாமதமாகவும், மறுமார்க்கமாக மதுரை - சென்னை எக்மோர் ரெயில் மதுரையில் இருந்து 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும்.

இவ்வாறு ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Change of train service passing through Trichy


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->