நீலகிரி: அருவன்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ரூ.12,300 ஊக்கத்தொகையுடன் அப்ரண்டிஸ் பயிற்சி!
Central Govt Job Alert Apprentice Vacancies at Aruvankadu Cordite Factory
நீலகிரி மாவட்டம், அருவன்காட்டில் அமைந்துள்ள மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கார்டைட் வெடிமருந்து தொழிற்சாலையில் (Cordite Factory) அப்ரண்டிஸ் பயிற்சிக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் மற்றும் டிப்ளமோ முடித்த இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ள இதில் மொத்தம் 40 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பணியிட விவரங்கள்:
இதில் பட்டதாரி பொறியாளர்களுக்கு (Graduate Apprentices) 20 இடங்களும், டிப்ளமோ முடித்தவர்களுக்கு (Technician Apprentices) 20 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
பொறியியல் பட்டதாரிகள்: கெமிக்கல் (14), மெக்கானிக்கல் (5), எலக்ட்ரிக்கல் (1) ஆகிய துறைகளில் பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு மாதம் ரூ.12,300 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
டிப்ளமோ முடித்தவர்கள்: கெமிக்கல் (14), மெக்கானிக்கல் (4), சிவில் (1), கம்ப்யூட்டர் (1) ஆகிய துறைகளில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.10,900 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
தேர்வு முறை மற்றும் தகுதி:
இந்தப் பணியிடங்களுக்குத் தனியாகத் தேர்வுகள் ஏதும் நடத்தப்படாது. விண்ணப்பதாரர்கள் தங்களது டிகிரி அல்லது டிப்ளமோ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இது மத்திய அரசு நிறுவனத்தில் அனுபவம் பெறுவதற்கும், எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கும் ஒரு சிறந்த தொடக்கமாக அமையும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து ஆவணங்களுடன் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பிரிண்ட் எடுக்கவும்.
தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து, சான்றிதழ்களின் நகல்களை இணைக்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை "The General Manager, Cordite Factory, Aruvankadu, The Nilgiris District, Tamilnadu - 643 202" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசித் தேதி 17.04.2026. காலக்கெடு முடிவதற்குள் தகுதியான விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பித்து இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
English Summary
Central Govt Job Alert Apprentice Vacancies at Aruvankadu Cordite Factory