ஐ.டி அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரம்.. அறிக்கை கேட்கும் மத்திய அரசு..? வெளியான பரபரப்பு தகவல்..!! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் ஒரு வார காலம் நடைபெற்ற இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்யும் முற்பட்டபோது அங்கு கரூர் மாநகராட்சி மேயர் கவிதா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் ஒன்று கூடி வருமான வரித்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தனர்.

மேலும் வருமானத்தோடு வரி துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதோடு அவர்கள் பயணித்த கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். திமுகவினர் தாக்கியதில் பாதிக்கப்பட்ட 4 வருமானவரித்துறை அதிகாரிகள் கரூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வருமானவரித்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 3 திமுக கவுன்சிலர்கள் உட்பட 19 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது பெண் வருமானவரித்துறை அதிகாரியை தாக்கியதால் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய புகாரில் கைதான 19 திமுகவினருக்கும் கரூர் மகிளா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனை எதிர்த்து வருமானவரித்துறை அதிகாரிகள் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியது குறித்து மத்திய அரசு தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு கடந்த வாரம் வியாழக்கிழமை தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கு தமிழக அரசு இன்னும் பதில் அனுப்பப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் கரூர் மேயர் கவிதா உட்பட பல கரூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் சிக்கி உள்ளதால் ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Central govt asking for report on IT officers attacked issue


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->