சர்ச்சைக்குள்ளான 'சஞ்சார் சாத்தி' செயலி: கட்டாயம் இல்லை - மத்திய அரசு தகவல்!
Central Government mobile App Sanchar Saathi jyotiraditya scindia
இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து மொபைல் போன்களிலும் மத்திய அரசின் 'சஞ்சார் சாத்தி' செயலியை கட்டாயமாக நிறுவ வேண்டும் என்ற தொலைத்தொடர்புத் துறையின் உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மத்திய அரசு அந்த முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளது.
சர்ச்சையின் பின்னணி
கட்டாய உத்தரவு: தொலைந்து போன அல்லது திருடுபோன போன்களைக் கண்டறிதல், ஐ.எம்.இ.ஐ. மோசடிகளைத் தடுத்தல் போன்றவற்றுக்காக உருவாக்கப்பட்ட 'சஞ்சார் சாத்தி' செயலி, அனைத்து புதிய மற்றும் பழைய போன்களிலும் அடுத்த 120 நாட்களுக்குள் கட்டாயம் மென்பொருள் புதுப்பித்தல் மூலம் இடம்பெற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.
விமர்சனங்கள்: இந்தச் செயலி, அழைப்புப் பதிவுகள், மெசேஜ்கள், கேமரா மூலம் புகைப்படங்கள் எடுக்கும் அணுகல் உள்ளிட்ட நிறைய தரவுகளைக் கோரக்கூடும் என்றும், இதன்மூலம் மக்களின் தனிப்பட்ட தகவல்களை மத்திய அரசு கண்காணிக்க வாய்ப்புள்ளதாகவும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி உட்படப் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மத்திய அரசின் விளக்கம்
விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பின்வருமாறு விளக்கம் அளித்துள்ளார்:
"இந்தச் செயலி அனைவரையும் சென்றடையச் செய்வது நமது பொறுப்பு. நீங்கள் அதை நீக்க விரும்பினால், அதை நீக்குங்கள். நீங்கள் அதைப் பயன்படுத்த விரும்ப விரும்பவில்லை என்றால், அதை பதிவு செய்யாதீர்கள். நீங்கள் செயலியில் பதிவு செய்தால் மட்டுமே அது செயலில் இருக்கும். பதிவு செய்யாவிட்டால், அது செயலற்றதாகவே இருக்கும்," என்று கூறி, கட்டாயமாக்கும் முடிவில் இருந்து அரசு பின்வாங்கியதை உறுதிப்படுத்தினார்.
English Summary
Central Government mobile App Sanchar Saathi jyotiraditya scindia