கொடநாடு வழக்கு || சேலத்தை சுத்து போட்ட சிபிசிஐடி! சூடு பிடிக்கும் புலன் விசாரணை! - Seithipunal
Seithipunal


கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி காவல் கூடுதல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையிலான குழுவினர் சேலத்தில் விசாரணை!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவத்தை சேலம் ஆத்தூரை சேர்ந்த கனகராஜ் தலைமையிலான கும்பல் அரங்கேற்றியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த 10 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு தற்போது ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் குற்றம் சாட்டை இருந்தார்.

சில விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி காவல் கூடுதல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையிலான குழுவினர் சேலம் சிபிசிஐடி அலுவலகத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சேலத்தில் நடத்தப்பட்ட விசாரணையானது கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்ததை மையப்படுத்தி நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் சிபிசிஐடிபோலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் சேலம் சிபிசிஐடி அலுவலகத்தில் இருந்த கனகராஜ் மரணம் தொடர்பான ஆவணங்களையும் சரி பார்த்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் விசாரணை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBCID officials probe in Salem regarding Kodanad case


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?




Seithipunal
-->