கொடநாடு வழக்கு || சிபிசிஐடி-யிடம் சிக்கியது யார்? நீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல்!!
CBCID filed Interim report in Ooty court in KodaNadu case
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் அரங்கேறிய கொலை மற்றும் கொள்ளை வழக்கு இன்று ஊட்டி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இன்று நடைபெறும் விசாரணையின் போது சிபிசிஐடி போலீஸார் தரப்பிலிருந்து இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

கடந்த செப்.8ம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சிபிசிஐடி போலீஸார் தரப்பில் 4 பக்கங்கள் கொண்ட இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் சிலரிடம் விசாரணை நடத்த இருப்பதால் இடைக்கால அறிக்கையின் முழு விவரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என சிபிசிஐடி தரப்பு நீதிபதியிடம் கோரிக்கை வைத்தது.

அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி அப்துல் காதர் வழக்கின் அடுத்த விசாரணையை அக்டோபர் 13ஆம் (இன்று) ஒத்திவைத்தார். அதன் படி கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. கடந்த 11 மாதங்களாக கொடநாடு வழக்கில் சிபிசிஐடி நடத்திய விசாரணையின் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
English Summary
CBCID filed Interim report in Ooty court in KodaNadu case