சப்-இன்ஸ்பெக்டரை எட்டி உதைத்த முன்னாள் எம்பி.. தீயாக பரவிய வீடியோ.. வழக்கு பதிவு செய்த காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்டம் முழுவதும் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சோதனைச் சாவடிகள் அமைத்து காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் 27 இடங்களில் காவல்துறையினர் தடுப்பு அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எந்த நேரத்தில் சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த முன்னாள் எம்பி அர்ஜுனன் தனது தோட்டத்தில் இருந்து ஓமலூர் சுங்கச்சாவடி வழியாக வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். 

அப்போது சுங்க சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அர்ஜுனன் காரை நிறுத்தி ஆவணங்களை கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அர்ஜுனன் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

வாக்குவாதம் முற்றிய நிலையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷை முன்னாள் எம்பி அர்ஜுனன் காலால் எட்டி உதைத்து, ஒருமையில் திட்டினார். பதிலுக்கு உதவி ஆய்வாளர் அர்ஜுனை எட்டி உதைத்துள்ளார். இதை அடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தை காவல்துறையினர் தங்களது செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்கள் வெளியிட்டுள்ளனர். 

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் புகார்படி அர்ஜுனன் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆபாச வார்த்தைகளால் திட்டுதல் தாக்குதலில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளில் கருப்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case filed against former mp


கருத்துக் கணிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா எத்தனை பதக்கங்களை பெற வாய்ப்பு உள்ளது?..Advertisement

கருத்துக் கணிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா எத்தனை பதக்கங்களை பெற வாய்ப்பு உள்ளது?..
Seithipunal