தங்கம் கடத்தல் - சென்னை விமான நிலையத்தில் சிக்கிய 113 பேர்.!  - Seithipunal
Seithipunal


தங்கம் கடத்தல் - சென்னை விமான நிலையத்தில் சிக்கிய 113 பேர்.! 

சென்னையில் உள்ள மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்திற்கு மஸ்கட்டில் இருந்து வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அதிகளவில் தங்கம், ஐபோன்கள், லேப்டாப்புகள், வெளிநாட்டு சிகரெட்களை நூற்றுக்கு மேற்பட்ட பயணிகள் கடத்தி வருவதாக, சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் படி சுங்கத்துறை அதிகாரிகள் விமானத்தில் வந்த 186 பயணிகளையும் நிறுத்தி, பல மணி நேரம் விசாரணை நடத்தினர். அதில் 73 பேர், கடத்தல் விவகாரங்களில் தலையிடாத, பயணிகள் என்று தெரிய வந்தது. 

இதையடுத்து அதிகாரிகள் மீதமிருந்த 113 பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர். அந்த சோதனையில், பயணிகள் தங்களுடைய உள்ளாடைகளுக்குள் தங்க கட்டிகள், தங்கப் பசைகள் உள்ளிட்டவற்றையும், சூட்கேஸ் மற்றும் பைகளில் ரகசிய அறைகள் வைத்து 120 ஐபோன்கள், 84 ஆண்ட்ராய்டு போன்கள், வெளிநாட்டு சிகரெட்கள், லேப்டாப்புகளை மறைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றில் தங்கம் மட்டும் மொத்தம் 13 கிலோ இருந்தது. இதேபோல், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 14 கோடி ரூபாய் என்பது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள், பயணிகள் 113 பேர் மீதும், சுங்க சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்து ஜாமீனில் விடுவித்தனர்.

மேலும், இவர்களை இயக்கும் கடத்தல் கும்பலின் தலைவர்கள் யார்? என்று மத்திய வருவாய் புலனாய்வு துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே விமானத்தில் வந்த 
113 பயணிகள் கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case file on 113 peoples for gold kidnape in chennai aiport


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->