சாலை பள்ளத்தில் தம்பதியினர் உயிரிழந்த விவகாரம் - 4 பேர் மீது வழக்குப்பதிவு.!!
case file against 4 peoples for couple died road work in tirupur
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் அருகே குள்ளாய்பாளையம் பகுதியில் பாலப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினர் தனது மகளுடன் விழுந்ததில் நாகராஜ், அவரது மனைவி ஆனந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மகள் தீக்ஷிதா பலத்த காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த விபத்துக்கு பாலம் நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாததே காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் இந்த விபத்து சம்பவம் தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கணேஷ், சைட் என்ஜினீயர் குணசேகரன், சைட் மேற்பார்வையாளர் கவுதம், ஒப்பந்ததாரர் சிவக்குமார் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே இந்த விபத்து நடந்த பகுதியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் உயிரிழந்த நாகராஜ்-ஆனந்தி குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
English Summary
case file against 4 peoples for couple died road work in tirupur