வீட்டு மாடியில் கஞ்சா செடி..வாலிபர் கைது! - Seithipunal
Seithipunal


வீட்டு மாடியில் பூந்தொட்டியில் கஞ்சா செடி வைத்திருந்ததை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.பிறகு சோதனையிட்டதில் அவரிடம் 50 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நாட்டில் போதை பொருட்கள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த காவல்துறையும் பல்வேறு யுத்திகளை கையாண்டு நடவடிக்கையை தீவிரப் படுத்தி உள்ளனர். இருந்த போதிலும் ஆங்காங்கே கஞ்சா விற்பனை கஞ்சா கடத்தல் போன்றவை  சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இப்படி போதை  பொருட்களை கடத்தி வரும்  குற்றவாளிகளை காவல்துறையினர் கண்காணித்து அவர்களை கைது செய்து வருகின்றனர். இந்த  நிலையில் கன்னியா  மாவட்டம்  மார்த்தாண்டம் அருகே வீட்டு மாடியில் கஞ்சா செடி வளர்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் போலீசார் நேற்று முன்தினம் மாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்போது அந்த பகுதியில் நின்றிருந்த ஒரு வாலிபர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். உடனடியாக  போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து சோதனையிட்டதில் அவரிடம் 50 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் மார்த்தாண்டம் அருகே செட்டிச்சார்விளையைச் சேர்ந்த சுபாஷ் கிருஷ்ணன் (27 வயது) என்பதும், பெயிண்டராக வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் சுபாஷ் கிருஷ்ணன் வீட்டிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் மாடியில் அவர் ஏராளமான செடிகளை வளர்த்து வந்துள்ளார். அதில் ஒரு பூந்தொட்டியில் கஞ்சா செடி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து  கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cannabis plant found in the house terrace Youth arrested


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->