தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றம்.! மகிழ்ச்சியில் மக்கள்.!!
can water strike case for chennai high court
தமிழகம் முழுவதும் கடந்த 27ஆம் தேதி மாலை 6 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் என தமிழ்நாடு அனைத்து அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பித்து 7 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது, இதற்கு எதிராக இந்த வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
போராட்டம் மூலம் நெருக்கடி கொடுக்கலாம் என நினைப்பது தவறு. கேன் குடிநீர் ஆலைகள் போராட்டம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. மூடப்பட்ட ஆலைகளை தற்காலிகமாக இயங்க அனுமதிப்பது தொடர்பாக இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மூடப்பட்ட குடிநீர் நிறுவனங்கள் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
விண்ணப்பத்தோடு 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும்,15 நாட்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சட்ட விரோத நிறுவனங்களை கண்காணிக்க கண்காணிப்பு குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நிலத்தடி நீரின் அளவை மீண்டும் அளவிட்டு அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு மூலம் தமிழ்நாடு அனைத்து அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர் சங்கம் போராட்டத்தை கைவிட வாய்ப்பு உள்ளது. மொத்தம் 552 குடிநீர் ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
English Summary
can water strike case for chennai high court