வலுவடைந்தது புயல் சின்னம்.. தமிழகத்தில் கன மழை பெய்ய போகும் மாவட்டங்கள்.!! 
                                    
                                    
                                   burevi cyclone update
 
                                 
                               
                                
                                      
                                            தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புரெவி புயலாக வெளுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக 2,3 மற்றும் 4ம் தேதிகளில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
புரெவி புயல் நாளை இலங்கை திரிகோணமலை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகை மற்றும் கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.