காதலுக்கு உதவிய தங்கையை கர்பமாக்கிய அண்ணன்... பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!  - Seithipunal
Seithipunal


மிழகத்தின், திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் காவல் சரகம் பாரதி நகரைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவன் கூலி வேலை செய்து வரும் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். சந்திரசேகரின் தங்கை முறையான 16 வயது சிறுமி ஒருவர் இவர்களின் காதலுக்கு உதவி செய்து வந்துள்ளார். மேலும், இந்த காதலர்கள் சிறுமியின் வீட்டில் ரகசியமாக சந்தித்து வந்துள்ளனர். அதேசமயம் சந்திரசேகர் தங்கை முறை சிறுமியிடமும் அத்து மீறியுள்ளார். 

இதை தொடர்ந்து, அந்த சிறுமியை மிரட்டி, பின் திருமணம் செய்து கொள்வதாக கூறியும் கடந்த ஒரு வருடமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இந்த காரணத்தினால் சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. பின்னர், அந்த சிறுமிக்கு நடந்த மருத்துவ பரிசோதனையின் போது சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. 

Image result for pregnant seithipunal

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் விசாரித்ததில், அண்ணன் சந்திரசேகர் தான் காரணம் என்று முழுக்கதையையும் கூறியுள்ளார். இதை தொடர்ந்து, அந்த சிறுமியின் பெற்றோர் தாராபுரம் அனைத்து மகளிர் போலீசாரிடன் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்திரசேகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதன் பின்னர் தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சந்திரசேகரனை ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.      


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

brother used her sister


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->