இன்ஸ்டாகிராம் காதலுக்கு அண்ணன் போட்ட முட்டுக்கட்டை...! மனமுடைந்து தங்கை எடுத்த விபரீத முடிவு...! - சோகத்தில் முடிந்த விவகாரம்...! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே சமூக வலைத்தளத்தின் மூலம் உருவான காதல் தொடர்பு, குடும்பத்தில் நீண்டநாள் மனக்கசப்பை ஏற்படுத்திய நிலையில், 19 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கயத்தார் வட்டத்திற்குட்பட்ட தெற்குமயிலோடை அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த செல்வத்தின் மகள் அபிசெல்வி (19), கடந்த மூன்று ஆண்டுகளாக சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் வாயிலாக சேலம் பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத் என்ற இளைஞருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த உறவு தொடர்பான தகவல் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்தினருக்கு தெரியவந்ததாகவும், இதற்கு அபிசெல்வியின் அண்ணன் சிவஞானம் மற்றும் அவரது தாயார் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அபிசெல்வி, அப்போது வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறியும் அந்த இளைஞருடன் அபிசெல்வி தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில், நேற்று கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த அபிசெல்வியை அவரது அண்ணன் சிவஞானம் கவனித்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஆத்திரமடைந்த சிவஞானம் தங்கையை கண்டித்ததுடன் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தால் ஆழ்ந்த மனஉளைச்சலுக்கு ஆளான அபிசெல்வி, வீட்டில் இருந்த ரசாயனப் பொருளை தண்ணீரில் கலந்து அருந்தியதுடன், பின்னர் தனது அறைக்குள் சென்று துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள், அபிசெல்வியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, குடும்பப் பின்னணி, காதல் தொடர்பு மற்றும் உயிரிழப்பிற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து பல்வேறு கோணங்களில் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் தெற்குமயிலோடை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

brother obstacle love Instagram heartbroken sister bizarre decision affair that ended tragedy


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->