பிரிட்டிஷ் பேரரசின் உறுப்பினர் விருது..புதுச்சேரிக்கு பெருமை சேர்த்த செவிலியர்!
British Empire member award A nurse who brought pride to Puducherry
மூன்றாம் சார்ல்ஸ் மன்னர் அவர்கள் வழங்கிய 2025 ஆம் ஆண்டின் புத்தாண்டு பட்டங்களில் மரியாதைக்குரிய பிரிட்டிஷ் பேரரசின் உறுப்பினர்விருதை புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட குமாரசாமி பெற்றுள்ளார்.
மூன்றாம் சார்ல்ஸ் மன்னர் அவர்கள் வழங்கிய 2025 ஆம் ஆண்டின் புத்தாண்டு பட்டங்களில் மரியாதைக்குரிய பிரிட்டிஷ் பேரரசின் உறுப்பினர் (Member of the Most Excellent order of British Empire - MBE) விருதை புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட குமாரசாமி பெற்றுள்ளார்.
இந்த உயரிய விருது செவிலியத் துறைக்கு அவர் அளித்த சிறப்பான பங்களிப்புகளுக்காகவும், குறிப்பாக சர்வதேச செவிலியர் சமூகத்திற்கு வழங்கிய ஆதரவு மற்றும் சேவைக்காக வழங்கப்பட்டுள்ளது.
Member of the Most Excellent order of British Empire - MBE என்பது பிரிட்டன் அரசின் மிக உயர்ந்த குடிமக்கள் விருதுகளில் ஒன்றாகும். இது இந்தியாவின் பத்மஶ்ரீ விருதுடன் ஒப்பிடத்தக்கது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சர்வதேச கல்வி பெற்ற செவிலியராக குமாரசாமி இந்த விருதைப் பெறும் இரண்டாவது நபராக இருக்கிறார்.
இந்த விருது துறையில் சிறப்பாக பணி புரிந்து நீடித்த மற்றும் முக்கியமான தாக்கம் ஏற்படுத்திய நபர்களுக்கு வழங்கப்படுகிறது.
பிரிட்டிஷ் இந்திய செவிலியர் சங்கத்தின் (BINA) நிறுவனர் மற்றும் தலைவர் ஆகியவர் குமாரசாமி. இந்த அமைப்பு 2020 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் (BAPIO) ஆதரவுடன் நிறுவப்பட்டது. BINA அமைப்பு இந்திய செவிலியர்கள் பிரிட்டன் சுகாதார அமைப்பில் நன்கு ஒருங்கிணைவதற்கும் அவர்களது தொழில்முறை வளர்ச்சி மற்றும் பணியியல் இலக்குகளை அடைய உயர்தர நலன்கள் மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது.
இவ்விருதைப் பெற்ற குமாரசாமி புதுச்சேரி பெத்தி செமினார் பள்ளியில் மெட்ரிகுலேஷன், கலவை கல்லூரியில் மேல்நிலைப்பள்ளி மற்றும் மதர் தெரேசா செவிலியர் கல்லூரியில் 1994 ஆம் ஆண்டு செவிலியர் பட்டம் பெற்று புதுச்சேரி அரசில் பணிபுரிந்தார். பின்னர் 2003 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்று செவிலியராக சிறப்பாகப் பணிபுரிந்து தற்போது பர்மிங்காமில் துணை இயக்குனராக பணிபுரிகிறார்.
தாய் நாட்டுக்கு வந்த குமாரசாமி இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் சபாநாயகர் செல்வம் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
English Summary
British Empire member award A nurse who brought pride to Puducherry