மணலை ஒண்ட சுரண்டி பாலம் இடிந்த நிலையிலும் ஆளும்கட்சியினர் அரங்கேற்றி வரும் அட்டூழியம்..? - Seithipunal
Seithipunal


உத்திரமேரூரிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் வெங்கச்சேரி மாகரல் இடையே செய்யாற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.

இப்பாலமானது சுமார் 70 வது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. உத்திரமேரூர் - காஞ்சிபுரம் இடையேயான போக்குவரத்திற்கு முக்கிய இணைப்பு பாலமாகும்.

இந்தப் பாலத்தின் வழியாகபள்ளி, கல்லூரி, வேலைநிமிர்த்தமாக என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினசரி சென்று வருகின்றனர்.

செய்யாற்றுப்படு கையில் தொடர் மணல் கொள்ளை காரணமாகக் கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த கனமழையில், ஆற்றுப்படுகையில் மணல் அரிப்பு ஏற்பட்டு தரைப்பாலமானது வலுவிழந்து உடைந்தது.

இதனால் உத்திரமேரூர் -காஞ்சிபுரம் இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டித்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் 28 கி.மீ தூரம் உள்ள காஞ்சிபுரத்திற்கு செங்கல்பட்டு, வாலாஜாபாத் வழியாக 62 கி.மீ சுற்றிச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

பின்னர், ராட்சச குழாய்களைக் கொண்டும், மணல் மூட்டைகளை அடுக்கியும் தரைப்பாலத்திதை மாவட்ட நிர்வாகம் சீர்செய்தது.

கடந்த மூன்று ஆண்டுகளாகப் பாலம் கட்ட எந்தவிதநடவடிக்கையும் எடுக்காத மாவட்ட நிர்வாகம், தற்போது வடகிழக்கு பருவழை முன்னெச்சரிக்கை பணி என்ற பெயரில் மீண்டும் மணல் மூட்டைகளை அடுக்கி வருகின்றனர்.

பாலம் அடித்துச் செல்லாமல் இருக்க புதிய பாலம் அமைக்காமல் மீண்டும் மணல் மூட்டைகளை அடுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மேலும், பாலம் கட்ட மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கி, தரமான பாலம் கட்ட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bridge damaged near kanchipuram


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->