பட்டா மாற்ற ரூ.40 ஆயிரம் லஞ்சம்: போலீசார் விரித்த வலையில் சிக்கிய கிராம நிர்வாக அலுவலர்! - Seithipunal
Seithipunal


கடலூர், ரெட்டிசாவடி பகுதியில் ரூ. 40 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கிராம நிர்வாக அலுவலரை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர், ரெட்டிசாவடி அடுத்துள்ள கீழ் அழிஞ்சம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சீனு (வயது 43). இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு கடலுரைச் சேர்ந்த தனலட்சுமி என்றவரிடம் 2.20 ஏக்கர் நிலத்தை கிரையம் செய்துள்ளார். 

அந்த நிலத்தை தனது பெயரில் பட்டா மாற்றம் செய்வதற்காக கடந்த டிசம்பர் 27ஆம் தேதி சீனு இணைய வழியில் விண்ணப்பித்துள்ளார். 

இதனை அடுத்து மதலப்பட்டு கிராம நிர்வாக அலுவலகத்திற்கு கடந்த புதன்கிழமை சீனு சென்று அலுவலகர் பிரபாகரனை சந்தித்து பட்டா மாற்றி தரும்படி கேட்டுள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் பட்டா மாற்றம் செய்வதற்காக ரூ. 40,000 லஞ்சம் கேட்டுள்ளார். 

இது குறித்து உடனடியாக சீனு ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்பு போலீஸ் ரசாயனம் தடவிய பணம் கொடுத்து அனுப்பினர். 

அதன்படி சீனு ரசாயனம் தடவிய பணத்தை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று நிர்வாக அலுவலர்களிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு போலீசார் பிரபாகரனை கைது செய்தனர். மேலும், கிராம நிர்வாக அலுவலரது வீட்டிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bribe case village administration officer arrested


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->