மீண்டும் எல்லை பதற்றம்! காரைக்கால் 12 மீனவர்கள் கைது...! - இலங்கை கடற்படையின் நடவடிக்கையால் அதிர்ச்சி
Border tension again 12 fishermen arrested Karaikal Shocked by action Sri Lankan Navy
தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இருந்து கடலுக்கு வாழ்வாதாரத்திற்காகச் செல்லும் மீனவர்கள் மீது, எல்லை மீறி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி இலங்கை கடற்படை தொடர்ந்து கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த தொடர்ச்சியான நடவடிக்கைகள், ஏற்கனவே சிரமத்தில் உள்ள மீனவர்களின் வாழ்க்கையை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன.இந்த நிலையில், காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து வழக்கம்போல் கடலுக்கு புறப்பட்ட இந்த மீனவர்கள், இலங்கை காரைநகர் கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினரால் திடீரென முற்றுகையிடப்பட்டு சிறைபிடிக்கப்பட்டனர்.
பிடிபட்ட 12 மீனவர்களையும், அவர்கள் பயணித்த விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றி, காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் மீனவர் சமூகத்தில் மீண்டும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Border tension again 12 fishermen arrested Karaikal Shocked by action Sri Lankan Navy