சேலத்தில் பரபரப்பு: எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்; தீவிர சோதனையில் நிபுணர்கள்..! - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் உள்ள அவரது வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

சேலம் சூரமங்கலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லம் உள்ளது. இந்த வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுபற்றிய தகவலறிந்த போலீசார், உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்பநாய் உதவியுடன் சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே, சென்னை பசுமை வழி சாலையில் உள்ள இ.பி.எஸ்., இல்லத்திற்கு கடந்த மாதம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தனர், தற்போதும் அவருடைய வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bomb threat to Edappadi Palaniswami house in Salem


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->