சென்னை - மதுரை இரயிலை தேனி வரை இயக்க தென்னக இரயில்வே நிர்வாகம் முடிவு.! - Seithipunal
Seithipunal


சென்னையில் இருந்து மதுரை வரை செல்லுக்கும் அதிவிரைவு இரயில் போடி வரை நீட்டிக்கலாம் என தெரியவருகிறது. 

கடந்த 2010 ஆம் வருடம் போடி - தேனி - மதுரை இடையே தொடங்கிய அகல இரயில்பாதை பணிகள், 2022 ஆம் வருடத்திற்குள் முழுவதுமாக நிறைவு பெறுகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்றதும் போடி - தேனி - மதுரை இரயில் சேவைகள் தொடங்கும். 

மேலும், திண்டுக்கல் - பழனி இடையே அகல இரயில் பாதைகளுக்கான பணிகள் நிறைவு பெற்றதும், சென்னை எழும்பூரில் இருந்து பழனிக்கு இரயில்கள் இயக்கப்படும். சென்னை - மதுரை இடையேயான அதிவிரைவு இரயிலை, போடி வரை நீடிக்கலாம் எனவும் தகவல் தெரியவந்துள்ளது. 

இதுகுறித்த விஷயங்களை இரயில்வே அதிகாரிகள் உறுதி செய்யவில்லை என்றாலும், அதிகாரிகள் தரப்பில் சென்னை - மதுரை இரயிலை தேனி வரை இயக்க திட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், 2022 ஆம் வருடத்தில் சென்னை - தேனி விரைவு இரயில் சேவை புதிதாக தொடங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bodi Madurai Train Service Starts Maybe 2022 Year and Officials Planned to Chennai Madurai Train till Theni


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->