ஒடிசா ரயில் விபத்து || மத வெறுப்பு தூண்டிய பாஜக ஆதரவாளர் கன்னியாகுமரியில் கைது..!! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். பலர் பய படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரத்தில் ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்த நிலையில் இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என ரயில்வே வாரியம் பரிந்துரை செய்தது.

அதனை ஏற்று மத்திய அரசு ரயில் ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தற்போது சிபிஐ அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற பகுதிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில் சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் "இதுவரை ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து முன்னுருக்கும் மேற்பட்டவர்களை கொன்றது மற்றும் 900 மேற்பட்டோர் படுகாயம் அடைந்தது அது நடந்த ரயில் நிலையத்தின் பெயர் பஹானாகா ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டரின் பெயர் *முகமது செரிப் அகமது* விபத்து குறித்து விசாரிக்க" என ஸ்டேஷன் மாஸ்டராக பணியாற்றிய ஒருவரின் பழைய புகைப்படத்தை பகிர்ந்து பதிவிட்டிருந்தார்

.

அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் விவாத பொருளானது.  ஆனால் பாஜக ஆதரவாளர் பதிவிட்டது போலியான புகைப்படம் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து கன்னியாகுமரி போலீசார் தாமாக முன்வந்து சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.  அவர் மீது மதவெறுப்புணர்வை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கன்னியாகுமரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கைது செய்யப்பட்ட நபர் தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பும் கோரியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP supporter arrested for inciting religious hatred


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->