கோவை கொடூரம்: தற்போது வெளியான சி.சி.டி.வி காட்சிகள்... வானதி சீனிவாசன் கடும் கண்டனம்!
bjp mla vanathi srinivasan condemn to kovai incident dmk govt
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கடந்த 15 நாட்களுக்கு முன் கோவை, கருமத்தம்பட்டி அருகே டீ குடிக்க வந்த வடமாநில இளைஞர்களை சிலர் தாக்கி கத்தியால் குத்த முயலும் சி.சி.டி.வி காட்சிகள் இப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தாலும் தாக்குதல் நடத்திய நபர்களை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி தொடர்ச்சியாக புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது தமிழகத்தின் மீதான நம்பிக்கையை சீர்குலைப்பது மட்டுமல்லாமல், மாநிலங்களுக்கிடையேயான தேவையில்லாத பதட்டத்தையும், பிரிவினைவாதத்தையும் உருவாக்கும் அபாயம் உள்ளது.
எனவே அரசு உடனடியாக இவ்விவகாரங்களில் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
English Summary
bjp mla vanathi srinivasan condemn to kovai incident dmk govt