பாஜக தலைவர் கல்லூரியில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் கைது.!
BJP leader college students sexual Harrasment in Nagapattinam
நாகையில் நர்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜக நாகை மாவட்ட தலைவர் கார்த்திகேயனுக்கு சொந்தமான தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. பாஜக மாவட்ட தலைவரின் மனைவி திருமலை ராணி மேலாளராக உள்ள கார்த்திகேயன் நர்சிங் கல்லூரியில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த கல்லுரியில் பணிபுரியும் ஆசிரியர் சதீஷ் என்பவர் மாணவிகளுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அக்கல்லூரியில் பயின்று வந்த நர்சிங் மாணவி ஒருவரிடம் ஆசிரியர் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார் அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்த செல்போன் உரையாடல் வெளியானது. அந்த உரையாடலில் கட்டாயப்படுத்தி மாணவியை ஆசிரியர் தன்னுடைய வீட்டிற்கு அழைப்பது போல ஆடியோ வெளியானது.

இந்த நிலையில் அந்த மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் கல்லூரி மற்றும் மாணவிகளிடம் தனித்தனியாக புகார்களை கேட்டறிந்தனர். அதில் மாணவிகளிடம் சதிஷ் என்ற ஆசிரியர் இப்படித்தான் கல்லூரிகளில் இப்படித்தான் பேசுவார் என்று தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சமூக நலத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஆசிரியர் பேசியது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் நாகை நகர காவல் நிலைய போலீசார் ஆசிரியர் சதிசை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
English Summary
BJP leader college students sexual Harrasment in Nagapattinam