அதிக வாக்குகளை பெற்று தருவோருக்கு கார் பரிசு - பாஜக வேட்பாளர் அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவிப்புகளை கட்சியின் தலைவர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்பி நரசிம்மன் நேற்று ஊத்தங்கரை சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:- "அதிக வாக்குகள் பெற்று தரும் பாமக, பாஜக மாவட்ட செயலாளர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும். இதே போல் எந்த வாக்குச்சாவடியில் அதிக வாக்குகள் கிடைக்கிறேதோ, அந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp candidate announce car price in krishnagiri constituency


கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?Advertisement

கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?
Seithipunal
--> -->