ஒரே பேட்டி! தமிழக அரசு, முதல்வர் - மொத்தமாய் போட்டு தாக்கிய அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


கோவை : அவிநாசி பாஜகவின் பாராளுமன்ற தொகுதி ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது, "அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலுக்குள் கட்சியை வலுப்படுத்த வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு சிறப்பு ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை. மக்களுக்காக போராடும் காவல்துறைக்கு ஊதியத்தை ஊதியத்தை தமிழக அரசு கொடுக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 

ஒரு யூகத்தின் அடிப்படையில் நான் இதனை தெரிவிக்கிறேன். டாஸ்மாக் மதுபானத்தின் தரம் குறைவு காரணமாகவே சிலர் கஞ்சா உள்ளிட்ட போதை பொருளை நாடுகின்றனர். டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறியது உண்மைதான். 

ஒரு உலகத்தின் அடிப்படையில் நான் கேட்கிறேன், திமுகவை சார்ந்த எந்த நிறுவனத்திடம் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கு, எந்த வகையான மதுபானங்கள் செல்கிறது. அந்த நிறுவனத்தை ஆடிட் செய்தார்களா? டாஸ்மாக் கடைகளுக்கு வரக்கூடிய மதுபானங்களை யார் சோதனை செய்தார்கள்?

ஒரு பக்கம் டாஸ்மாக் மக்களை குடித்து அடிமையாக்கி கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் அடிமையானவர்களுக்கு அந்த டாஸ்மாக் கிக் கிடைக்கவில்லை, சரியான அளவில், எதிர்பார்க்கப்பட்ட ஆல்கஹால் அளவு இல்லை என்று கஞ்சாவை நோக்கி போகிறார்கள். நகைச்சுவையாக அமைச்சர் சொல்லியிருந்தாலும் கூட, அது உண்மை. அதற்கு காரணம் தமிழக அரசுதான்.

சென்னையில் சுகாதாரம் அதலபாதாளத்தில் உள்ளது. மக்கும் குப்பை மக்காத குப்பைகளை அவர்கள் பிரித்தெடுப்பதே கிடையாது. ஸ்வச் பாரத்தில் 44வது இடத்தில் இருந்த சென்னை, இப்போது 200வது இடத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. இதுதான் சிறுவன் உயிரிழப்புக்கு காரணம்.

இப்படியே போனால், மழைநீர் குப்பைகளுடன் கலந்து, அது குடிநீர் பைப் வழியாக செல்லும். அதனை மக்கள் அருந்துவார்கள். ஆனால் சுகாதாரத்துறை அமைச்சருக்கோ, மற்றவர்களுக்கோ இதுபற்றி கவலை இல்லை.

முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்வது தவறு இல்லை. ஆனால், வெள்ளை அறிக்கை வழங்காமல் தொடர்ந்து வெளிநாட்டு பயணம் சென்றுக் கொண்டிருக்கும் ஒரு முதல்வர் ஸ்டாலின் தான்.

ஏற்கனவே, முதல்வர் துபாய், சிங்கப்பூர், ஜப்பான் சென்று வந்ததற்கான பயன் என்ன? எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு? பணம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் என்ன? இப்படி அரசு செலவில் ஒரு முதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார் என்றால் மக்கள் கேள்வி கேட்பார்கள் தான்" என்று ஆண்ணாமலை தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Annamalai say about DMK Govt and Minister Duraimurugan Tasmac Alcohol


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->