த.வெ.க விஜய் வெளியிட்ட அறிவிப்பு...! தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழு நியமனம்...!
Announcement made by TVK Vijay Appointment Chief Disciplinary Action Committee
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் 'விஜய்', தனது கட்சியின் தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழு மற்றும் மண்டல ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்களை நியமனம் செய்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது, "கழக விதிகளின்படி, தமிழக வெற்றிக் கழகத் தலைவரே, தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் ஆவார். இதன்படி, பின்வரும் தோழர்களை, கழகத் தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்கிறேன்.

உறுப்பினர் 1. திரு. என். ஆனந்த் கழகப் பொதுச் செயலாளர்.
உறுப்பினர் 2. திருமதி சி.விஜயலட்சுமி, மாநிலச் செயலாளர், உறுப்பினர் சேர்க்கை அணி,
இக்குழுவானது, கழகத்தின் அனைத்து நிலைகளிலுமுள்ள நிர்வாகிகளும் தோழர்களும் கழகக் கட்டுப்பாட்டை மீறி, கொள்கைகள், கோட்பாடுகள். குறிக்கோள்களுக்கு எதிராகச் செயல்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இக்குழுவிற்குக் கழக நிர்வாகிகளும் தோழர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.மேலும் கழக நிர்வாக வசதிக்காகத் தமிழ்நாட்டிலுள்ள வருவாய் மாவட்டங்கள் வடக்கு, மேற்கு, தெற்கு மற்றும் மத்திய கிழக்கு என 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த 4 மண்டலங்களிலுள்ள வருவாய் மாவட்டங்களுக்குட்பட்ட கழக மாவட்டங்களுக்கு மண்டல ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்கள் நியமிக்கப்படுகின்றன.இந்த மண்டல ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்கள் ஒவ்வொன்றிற்கும் கீழ்க்கண்டவாறு ஒரு பெண் உட்பட 4 உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
1. வடக்கு மண்டலம்:
ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள்:
1. திரு.A.பார்த்திபன் மாவட்டக் கழகச் செயலாளர் சேலம் மத்திய மாவட்டம்
2. திரு.K.விக்னேஷ் மாவட்டக் கழகச் செயலாளர், கோவை தெற்கு மாவட்டம்
3. திரு.ரவிசங்கள் மாவட்டக் கழகச் செயலாளர், திருச்சி புறநகர் மேற்கு மாவட்டம் 4. திருமதி B.தன்யா, கழக உறுப்பினர். ஈரோடு மாநகர் மாவட்டம்
மேற்கண்ட குழுவிற்கான வருவாய் மாவட்டங்கள்:
1. சென்னை
2. திருவள்ளூர்
3. காஞ்சிபுரம்
4. செங்கல்பட்டு
5. ராணிப்பேட்டை
6. வேலூர்
7. திருப்பத்தூர்
8. திருவண்ணாமலை
9. விழுப்புரம்
10. கடலூர்
11. கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள்.
2.மேற்கு மண்டலம்
ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள்:
1.திரு. R.சரவணன் மாவட்டக் கழகச் செயலாளர் தஞ்சை மத்திய மாவட்டம்
2.திரு.S.P.தங்கபாண்டி மாவட்டக் கழகச் செயலாளர், மதுரை மாநகர் தெற்கு மாவட்டம்
3.திரு.R.பரணி பாலாஜி மாவட்டக் கழகச் செயலாளர். கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம்
4. திருமதி A.சத்திய பாமா கழக உறுப்பினர். திருநெல்வேலி தெற்கு மாவட்டம்
மேற்கண்ட குழுவிற்கான வருவாய் மாவட்டங்கள்:
1. திண்டுக்கல்
2. கரூர்
3. நாமக்கல்
4. திருப்பூர்
5. ஈரோடு
6. கோயம்புத்தூர்
7. நீலகிரி
8. சேலம்
9. தர்மபுரி
10. கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள்.
3.தெற்கு மண்டலம்
ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள்
1. திரு.V.சம்பந்குமார் மாவட்டக் கழகச் செயலாளர் கோவை மாநகர் மாவட்டம்
2. திரு.M.சுகுமார் மாவட்டக் கழகச் செயலாளர், நாகப்பட்டினம்
3. திரு.J.பர்வேஸ் மாவட்டக் கழகச் செயலாளர், பதுக்கோட்டை மத்திய மாவட்டம்
4. திருமதி M.ராணி - கழக உறுப்பினர், கரூர் மேற்கு மாவட்டம்
இவ்வாறு அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
Announcement made by TVK Vijay Appointment Chief Disciplinary Action Committee