அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை! - Seithipunal
Seithipunal


தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே பெரும் ஏற்றத் தாழ்வுகளை சந்தித்துள்ளது. கடந்த 22ம் தேதி, சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ரூ.74,320-யை தொட்டது. 

23ம் தேதி ரூ.2,200 குறைந்து சவரன் ரூ.72,120-ஆகவும், 24ம் தேதி மேலும் ரூ.80 குறைந்து ரூ.72,040-ஆகவும் விற்பனையானது. 

அதன் பின் நான்கு நாட்கள் விலை மாற்றமின்றி நிலைத்திருந்தது. நேற்று, சவரன் ரூ.71,840-க்கும் கிராம் ரூ.8,980-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், இன்று மாதத்தின் முதல் நாளில் தங்கம் விலை கடுமையாக குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.205 சரிந்து ரூ.8,775-ஆகவும், சவரன் ரூ.1,640 குறைந்து ரூ.70,200-ஆகவும் விற்பனையாகிறது. 

வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.109 ஆகி, கிலோவுக்கு ரூ.2,000 குறைந்து ரூ.1,09,000-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gold Price Today chennai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->