'ஓய்வறியா உழைப்பினை முதலீடாக்கி...!' - உழைப்பாளர்கள் தின வாழ்த்து தெரிவித்த த.வெ.க விஜய்
Labor Day wishes by TVK Vijay
தமிழக வெற்றிக் கழக தலைவர் 'விஜய்' தனது எக்ஸ் வலைதளத்தில் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில் அவர் பதிவிட்டதாவது,"ஓய்வறியா உழைப்பினை முதலீடாக்கி, உதிரத்தை உரமாக்கி.

உறுதியை ஒற்றுமையைப் படிக்கற்களாக்கி எங்கள் வலிமை என எடுத்துக் காட்டி எடுத்த பணியை முடித்துக் காட்டி உலகிற்கு அச்சாணியாகத் திகழும் தொழிலாளர்களுக்கு எந்நாளும் உறுதுணையாய் நிற்போம்!
உழைப்பாளர் உரிமை காப்போம்!
இந்த மே தினத்தில் உழைப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! " என்று தெரிவித்திருந்தார்.இதற்கு அவரின் ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
English Summary
Labor Day wishes by TVK Vijay